வாகன பெருக்கத்தை தடுக்க, குடும்பத்தில் ஒரு பைக், காருக்கு மேல் வாகனம் வாங்கினால் வரி
திருவனந்தபுரம்: ஒரு குடும்பத்தில் ஒரு பைக், ஒரு காரை தவிர மேலும் ஒரு வாகனம் வாங்கினால் கூடுதல் வரி விதிக்க கேரள அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார் .
திருவனந்தபுரத்தில் இளைஞர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது, 'கேரளாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவ துடன் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
பெரும்பாலான குடும் பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இது அவசியமில்லாதது. எனவே, ஒரு வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும், ஒரு காரும் இருந் தால் கூடுதலாக வாகனம் வாங்குவதை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலும் ஒரு வாகனம் வாங்குபர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக விரைவில் மத்திய அமைச்சர்கள் சவுதி அரேபியா செல்ல உள்ளனர். இக்குழுவில் கேரளாவை சேர்ந்த அமைச்சரும் செல்கிறார்' ,என உம்மன் சாண்டி கூறினார்.












Click it and Unblock the Notifications