லடாக் எல்லையில் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீனா: பார்லி. குழுவிடம் அதிகாரிகள் தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையான லடாக் பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் தூரம் வரை சீனா ராணுவத்தினர் ஊடுருவி கூடாரம் அமைத்துள்ளதாக பார்லிமென்ட் குழுவிடம் பாதுகாப்பு துறைக்கான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி 10 கிலோ மீட்டர் ஊடுருவி கூடாரங்களை அமைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதிக்கு கூடுதல் வீரர்களை இந்திய ராணுவம் அனுப்பிவைத்து உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அங்கு இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜ்பாப்பர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜவதேகர் கலந்து கொண்டு சீன ராணுவ ஊடுருவல் பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பாதுகாப்பு துறை செயலாளர் சசிகாந்த் சர்மா மற்றும் சில மூத்த ராணுவ அதிகாரிகள், கடந்த 16-ந் தேதி ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள், லடாக் பகுதிக்குள் 19 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவத்தினர் ஊடுருவி கூடாரங்கள் அமைத்து இருப்பதை கண்டுபிடித்தனர் என்றனர்.
முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜவதேகர் உள்ளிட்டோர் இந்த தகவல்கள் போதுமானதாக இல்லை என்றும் வருகிற 30-ந் தேதி நடைபெறும் பார்லிமென்ட் கூட்டத்தில் அங்குள்ள நிலைமை பற்றிய தெளிவான விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications