For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் இருந்து செளதி சென்ற விமானத்தில் பயணி சாவு: அவரசரமாய் சென்னையில் தரையிறங்கிய விமானம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மலேசியாவில் இருந்து செளதி அரேபியா சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமான் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. ஆனால், டாக்டர்கள் சோதனையிட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

கோலாலம்பூரில் இருந்து ஜெட்டா நகருக்கு நேற்று சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் 260 பயணிகள் இருந்தனர். அதில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமத் (86) என்பவரும் இருந்தார். இவர் தனது உறவினர்களுடன் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்வதற்காக பயணம் செய்தார்.

சென்னை வான் எல்லையில் நேற்று மாலை 6.30 மணிக்கு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது அஹமதுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் விமான பணியாளர்களிடம் தெரிவிக்கவே, சென்னை விமான நிலையத்தை பைலட்கள் தொடர்பு கொண்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டனர்.

இதையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியவுடன் தயாராக இருந்த டாக்டர்கள் குழு, உடனே விமானத்திற்கு விரைந்து அஹமதை சோதித்தனர். ஆனால், அவர் வானிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதே விமானத்தில் அஹமதின் உடல் ஜெட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 1.30 மணி நேரம் தாமதத்துக்குப் பின் இரவு 8 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

English summary
A Saudi airline plane en route from kuala lumpur to Jetta made an emergency landing in Chennai airport after one of its passengers died during flight. The passenger was on his way to do Haj
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X