இந்தியாவின் ஏவுகணை ஆய்வு மைய ஆயுத கிடங்கில் தீ: குண்டுகள் வெடித்துச் சிதறின
Subscribe to Oneindia Tamil

ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சோதனைக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் இருந்த கிடங்கு தீப்பிடித்தது. இதில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. உடனே தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தன. இதையடுத்து அந்த வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் நல்ல வேளையாக உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட இடம் ஏவுகணைகளை சோதனை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications