முன்விரோதம்: ஹரியானாவில் 10ம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொன்ற சக மாணவர்கள்
ரோஹ்தக்: ஹரியானாவில் 10 வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சேர்ந்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டம் மேஹம் நகரில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அங்கூர் என்ற மாணவனை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதைப் பார்த்த 10ம் வகுப்பு மாணவன் நிதின்(15) தனது நண்பன் அங்கூரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து நிதினை சுட்டுக் கொன்றார்.
நிதினை சுட்டுக் கொன்றவர் அவருடன் ஒரே வகுப்பில் படித்தவர். மேலும் அங்கூரைத் தாக்கியவர்களும் நிதினுடன் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 குற்றவாளிகளில் 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையே ஒரு கும்பல் குற்றவாளிகளில் ஒருவரின் வீட்டை சூரையாடியதுடன் கார் ஒன்றுக்கு தீ வைத்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நிதினின் குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் மேஹம் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இரண்டு கும்பலைச் சேர்ந்த சிறுவர்களுக்கிடையேயான முன்விரோதம் காரணமாகத் தான் இந்த கொலை நடந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications