புதுவையில் கோஷ்டி மோதல்: 7 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசிய முகமூடி மனிதர்கள்- 3 பேர் காயம்
புதுச்சேரி: புதுவையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 7 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
புதுவை வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணவாளன். அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜசேகரன் தவளக்குப்பம் அருகே இருக்கும் நரம்பை கிராமத்திற்கு இன்று சென்றார்.
அப்போது மணவாளனின் ஆதரவாளர்கள் ராஜசேகரனை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் வம்பாகீரப்பாளையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது முகமூடி அணிந்து 3 பைக்குளில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை 7 இடங்களில் வீசினர்.
அதில் ஒரு குண்டு ஆட்டோ அருகே விழுந்து வெடித்தது. இதில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சங்கர் மற்றும் 2 பெண்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டை வீசியவர்கள் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமாக உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications