இன்சூரன்ஸ் பணத்துக்காக கையை வெட்டிக் கொண்ட நபர்! ரூ. 15 கோடியும் போச்சு..
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் விபத்து இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக ஒரு நபர் கையை வெட்டிக் கொண்டு தற்போது சிக்கலில் மாட்டி தவிக்கிறார்.
இறந்ததுபோல் நடித்து இன்சூரன்ஸ் தொகையைப் பெற முயன்று மாட்டிக்கொள்ளும் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைக் காட்சியை திரைப்படத்தில் பார்த்து வயிறு குலுங்க சிரித்திருப்பீர்கள். ஆனால், ஸ்பெயினில் நடந்த கதையோ சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது மாதிரியானது.
பெயர் குறிப்பிடப்படாத இந்த நபர் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு செய்திருந்தாராம். வாழும்போதே அதிலிருந்து இழப்பீடு தொகையை பெற விரும்பியுள்ளார்.
இதற்காக அவர் தனது கையை தானே துண்டித்துக் கொண்டு விபத்தில் சிக்கி கையை இழந்து விட்டதாக கூறி ரூ.15 கோடி (1.78 மில்லியன் பவுண்ட்) இழப்பீடு கேட்டு முறையீடு செய்தார். ஆனால் காயத்தின் தன்மை இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே தீவிர மருத்துவ சோதனை நடத்திய போது அவருடைய நாடகம் வெட்டவெளிச்சமானது. இதன் விளைவு இன்சூரன்ஸ் பணம் கைக்கு கிட்டாமல் போனதுடன் துண்டித்த கைக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் பணத்தை செலவிட நேரிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications