8 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி
டெல்லி: 8 கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி மூன்றாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பிறவியிலாவது தன்னை பெண்ணாக படைத்துவிடாதே என்று கடவுளுக்கு அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள பர்ஷ் பஜார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த மாதம் 15-ந்தேதி அவளது 10 வயது தம்பியுடன் சேர்த்து கடத்தப்பட்டாள்.
காசியாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் 9 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து வைத்து 8 பேர் மாறி, மாறி பலாத்காரம் செய்தனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பினாள்.
வீடு திரும்பிய அவள் கடும் மனஉளைச்சல் காரணமாக 2 தடவை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள். அவள் தற்கொலை எண்ணத்துடன் இருந்ததால் கடந்த 22-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவள் நேற்று மாத்திரைகளை நிறைய தின்று 3வது முறையாக தற்கொலைக்கு முயன்றாள்.
பெண்ணாக படைக்காதே
தற்கொலைக்கு முயலும் முன்பு அந்த சிறுமி தன் தாயார் செல்போனில் பேச்சை பதிவு செய்துள்ளாள். அதில், அவள், இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. கடவுளே... அடுத்த பிறவியிலாவது என்னை பெண்ணாக படைக்காதே. சாவில்தான் எனக்கு அமைதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். எனது இந்த முடிவுக்காக என்னை திட்டாதீர்கள். முடிந்தால் என் சாவுக்குப் பிறகு என்மீது அன்பு காட்டுங்கள் என்று கூறி உள்ளாள்.
தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் உயிரை டாக்டர்கள் கடுமையாக போராடிக் காப்பாற்றினர். இதையடுத்து அந்த சிறுமிக்கு கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications