இலங்கையில் சிறையில் வாடும் 26 மீனவர்கள்: மே 6 வரை காவல் நீட்டிப்பு
கொழும்பு: நாகப்பட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 26 இந்திய மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மேட்டை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள், கடந்த 3-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் 26 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் இலங்கையின் அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. எனினும் ஏப்ரல் 26ம் தேதி வரை அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அதன்பிறகும் அவர்களை விடுவிக்க முன் வராத யாழ்ப்பாணம் நீதிமன்றம், அவர்களின் காவலை வரும் மே மாதம் 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மீனவர்களின் குடும்பங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications