மரக்காணம் கலவரம்- வி.சிறுத்தைகளின் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மரககணம் கலவரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை நடப்பதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரக்காணம் கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மரக்காணம் கலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான விளக்கத்தை சட்டபேரவையில் தெரிவித்தார். தமிழகத்தில் அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

தற்போது மரக்காணம் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாளை நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 7-ந்தேதி காலை சென்னை தியாகராயநகர் அரங்கில் மக்கள் ஒற்றுமை மாநாடு நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+