ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்பரீஷ் அவமரியாதை: ரசிகர்கள் ஆத்திரம்

சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகாவில் 3வது கட்ட பிரச்சாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். மாண்டியா தொகுயில் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அம்பரீஷ் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் ராகுல் காந்தி கூட்டத்திற்கு வந்தார்.
சுமலதா மேடையின் பின் வரிசையில் அமர்ந்தார். மாண்டியா வேட்பாளர் என்பதால் அம்பரீஷ் ராகுல் காந்தி இருக்கை அருகே காலியாக இருந்த நாற்காலியில் உட்கார முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அம்பரீஷை பின் வரிசையில் சென்று உட்காருமாறு கூறினார்.
இதை அவமானமாக நினைத்த அவர் மசூதனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராகுல் காந்தி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தபோது நீயே பேசு என்று கோபமாக கூறிவிட்டு அம்பரீஷ் மேடையை விட்டு இறங்கி பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்தார். அதன் பிறகு தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்பரீஷை மேடையில் வந்து அமருமாறு கூறினார். ஆனால் அம்பரீஷ் மேடைக்கு வர மறுத்துவிட்டார்.
நான் மேடையில் இருந்தால் பிரச்சார செலவு வேட்பாளரான என் கணக்கில் சேரும். இப்போது அது கட்சி கணக்கில் சேரும். நீ என்னை அவமானப்படுத்தினாலும் எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய் என்று கூறி அவர் இறுதிவரை மேடையில் வந்து அமரவில்லை. ராகுல் கூட்டத்தில் அம்பரீஷ் அவமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications