ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய்...
ஆனால், அவ்வாறு செய்ய கருணாநிதி விரும்பவில்லை. எனவே தான், 29.6.1974 அன்று செய்தியாளர்கள் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் "கச்சத் தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் அறிவித்துள்ளாரே, உங்கள் கருத்து என்ன?"" என்று கேட்டதற்கு, "அது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று பதில் கூறியுள்ளார் கருணாநிதி.
கச்சத் தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மெளனம் சாதித்துவிட்டு, கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்ட பிறகு, பெயரளவிலே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத் தீவு பிரச்சனைக்கு மூடு விழா நடத்தினார் கருணாநிதி.
அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய கருணாநிதி, "ஜூன் மாதம் 27 ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27ம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப்போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்..."" என்று கூறியிருக்கிறார்.
இதில் எது உண்மை கருணாநிதி?...
ஆனால், கருணாநிதியின் தலைமையில் "டெசோ"" அமைப்பின் சார்பில் 15.4.2013 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கச்சத் தீவு குறித்த தீர்மானத்தில், "1974ம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன..."" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் எது உண்மை என்பதை கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். 1974-ல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேசிய கருணாநிதி, "கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்; பதறிப் போனேன்" என்கிறார்.
ஆனால் 2013ல், கடந்த மாதம் நடைபெற்ற டெசோ கூட்டத்தில், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்! இது என்ன பித்தலாட்டம்? எப்படியிருந்தாலும், கச்சத் தீவு பிரச்சனையில் கருணாநிதியின் செயலற்ற தன்மை காரணமாக, இரட்டை நிலை காரணமாக, தனக்கே இயல்பான கபட வேடம் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications