சிபிஐ-யிடம் சிக்கிய மருமகன்! பிரதமரிடம் பவன்குமார் பன்சால் விளக்கம்- ராஜினாமா செய்ய விருப்பம்!

1975 ஆம் வருடம் ரயில்வே பணியில் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் தமது பதவி உயர்வுக்காக ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் விஜய் சிங்லா மற்றும் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ரூபாய் 90 லட்சத்துடன் மும்பை சென்றிருந்த போது சிபிஐ போலீசாரிடம் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்படி விஜய் சிங்லாவை சிபிஐ போலீசார் டெல்லியில் கைது செய்தனர். அவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பவன்குமார் பன்சாலின் அமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தமக்கும் தமது மருமகனுக்கும் எந்த ஒரு பண ரீதியான தொடர்பும் இல்லை என்றும் பன்சால் விளக்கம் அளித்தார்.இதைத் தொடர்ந்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை பவன்குமார் பன்சால் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தாம் அமைச்சர் ப்தவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் கூறினார். ஆனால் இதை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications