மாம்பழ ஜூஸ் குடித்த பெண் மரணம்... கணவன், குழந்தைகள் கவலைக்கிடம்
நெல்லை: நெல்லை அருகே மாம்பழச்சாறு அருந்திய பெண் ஒருவர் பலியானார். மேலும் அவரது கணவன், குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி வள்ளித்தாய் 40, மற்றும் குடும்பத்தினருடன் தாழையூத்து பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த பழக்கடையில் ஜூஸ் குடித்தனர்.
இந்த ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் வள்ளித்தாயின் உடலில் மாறுதல் ஏற்பட்டது. அவரை உடனடியாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்..
சிறிது நேரத்தில் பேச்சிமுத்து, அவரது தாயார் சிதம்பரம், மகள்கள் மாரியம்மாள் 10, ஆறுமுகக்கனி 7, மகன் உடையார் 5, ஆகியோரும் அதே பழச்சாறு குடித்ததால் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே அனைவரும் நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூஸ் தயாரிக்கப்பயன்படுத்திய மாம்பழம், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்தது என தெரிகிறது. இதனால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது. இதை அறியாமல் குடித்த வள்ளித்தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications