பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டுள்ள 23 இந்தியர்களின் மனநலம் பாதிப்பு -இந்திய, பாக். நீதித்துறை கமிட்டி
டெல்லி: பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 23 இந்தியர்க் கைதிகளின் மனநலம், உடல்நலம் பாதிப்படைந்திருப்பதாக இந்திய, பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டன. அது இந்திய, பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டி எனப் பெயரிடப்பட்டது. இந்த கமிட்டியில் இந்திய தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.எஸ். கில், எம்.ஏ.கான் ஆகியோரும், பாகிஸ்தான் சார்பில் முன்னாள் நீதிபதிகள் அப்துல் காதிர் சவுத்ரி, நாசிம் ஆசியம் ஜாகித், மியான் முகமது அஜ்மல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தானில் லாகூர் கோட் லக்பட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியான இந்தியர் சரப்ஜித் சிங், சக கைதிகளால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான நிலையில், அங்கு பல்வேறு சிறைகளில் உள்ள இந்திய கைதிகளை இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டியினர் கடந்த வாரம் பார்வையிட்டனர்.
இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டியினர் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் சிறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் முன்பாக 535 இந்திய கைதிகள் (இவர்களில் 483 பேர் மீனவர்கள்) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில், லாகூர் கோட் லாக்பட் சிறையில் 20 இந்தியர்களும், ராவல்பிண்டி அடியாலா சிறையில் 2 இந்தியர்களும், கராச்சி மாலிர் சிறையில் ஒரு இந்தியரும் என 23 பேர் மனநிலை பாதித்தவர்களாக காணப்படுவதாகவும், இவர்கள் சிகிச்சைக்காக எந்தவொரு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. .
இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டியினர், மிகவும் உடல் நலமற்று இருக்கிறவர்களை, மனநலம் பாதித்தவர்களை, செவித்திறன் இழந்தவர்களை, பேச இயலாதவர்களை உரிய மருத்துவமனையில் அனுமதித்து சரியான சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தகைய கைதிகளை, இளங்குற்றவாளிகளை, பெண்களை, முதியவர்களை கருணை அடிப்படையில், மனித நேய அடிப்படையில் நடத்துவதற்கு ஏற்ற வழிமுறை காண வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கைதிகளையும், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் வருடத்துக்கு குறைந்தது 4 முறையாவது தூதரக அதிகாரிகள் பார்த்து வர வகை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications