4 ஆண்டுகளில் ஓடும் ரயிலில் 2 பிரசவம்: இரண்டிலுமே இரட்டைக் குழந்தைகளை பெற்ற உ.பி. பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ரயிலில் இரண்டாவது முறையாக இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள குந்தரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹபிபுல்லா. அவரது மனைவி ஜுபின் நிஷா. அவர்களுக்கு 4 வயதில் இரட்டைக் குழந்தைகள்(ஆண், பெண்) உள்ளனர். இந்நிலையில் நிஷா மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணியான நிஷா மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹபிபுல்லா நேற்று குஷிநகர் எக்ஸ்பிரஸில் மும்பையில் இருந்து கோண்டா சென்றார்.
ரயில் உன்னாவ் மற்றும் லக்னோ இடையே செல்லும்போது நிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

ரயிலிலியே பிரசவம்
ரயில் லக்னோவை அடையும் முன்பே நிஷா மீண்டும் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டுமே ஆண் குழந்தைகள்.

லக்னோ மருத்துவமனையில் அனுமதி
ரயில் லக்னோவை அடைந்தவுடன் தாயும், குழந்தைகளும் அங்குள்ள ராணி மேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதல் பிரசவமும் ரயிலில் தான்
நிஷாவின் முதல் பிரசவமும் ஓடும் ரயிலில் தான் நடந்துள்ளது. முதல் பிரசவத்திலும் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications