என் மனைவியையா கடிக்கிறாய் - நாய் மீது பாய்ந்து கடித்துக் குதறிய அமெரிக்கர்
சிகாகோ: மனிதனை நாய் கடித்தால் செய்தி இல்லை, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி என்பார்கள். அதன்படி, அமெரிக்காவில் ஒரு நபர் நாயைக் கடித்து செய்தியாகியுள்ளார்.
தனது மனைவியைக் கடிக்கப் பாய்ந்த நாயைத் தடுக்க வேறு வழியில்லாமல் அந்த நாயைக் கடித்துள்ளார் அந்த நபர்.
அயோவாவைச் சேர்ந்தவர் கேரன் ஹென்றி. இவர் தனது நாய் கேண்டியுடன் தனது மாமனார் வீட்டுக்கு அருகே வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தத் தெருவில் இருந்த ஒரு பெரிய நாய், வெறியுடன் கேரனை நோக்கிப் பாய்ந்தது. அவரை கீழே தள்ளி வெறியுடன் கடிக்க முயன்றது. கேரனின் நாய் மீதும் பாய்ந்து கடித்தது.
இதைப் பார்த்த கேரனின் கணவர் லேயன் வேகமாக ஓடி வந்தார். தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் நாய் விடவில்லை. இதனால் படு ஆவேசமாக அந்த நாய் மீது பாய்ந்தார். நாயை வெறி கொண்டு கடுமையாக கடித்தார். இதையடுத்து நாய் அலறியபடி கேரனை விட்டு தப்பி ஓடியது.
பின்னர் உடனடியாக தனது மனைவியையும், நாயையும் அங்கிருந்து மீட்டுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் லேயன். இந்த சண்டையில் லேயனுக்கும் நாய்க்கடி பட்டு விட்டது. அனைவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications