ஆருஷி -ஹேமராஜ் கொலை: தல்வார் கோரிக்கை குறித்து சிபிஐ கோர்ட் இன்று முடிவு
டெல்லி: டெல்லியை உலுக்கிய ஆருஷி, ஹேமராஜ் கொலை வழக்கில் கைதான டாக்டர் தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தம்பதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு குறித்து இன்று சிபிஐ கோர்ட் தீர்மானிக்கவுள்ளது
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகள் அனைத்தும் முடியும் வரை தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி சிபிஐ கோர்ட்டில் தல்வார் தம்பதி மனு செய்துள்ளது. இதன் மீதுதான் இன்று சிபிஐ கோர்ட் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
முன்னதாக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தல்வார் தம்பதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கின் 14 சாட்சிகளையும் விசாரணை கோர்ட்டில் மீண்டும் அழைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என்று கோரியிருந்தனர்.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்கனவே சிபிஐ கோர்ட் நிராகரித்து விட்டது என்பது நினைவிரு்கலாம். இதனால்தான் சுப்ரீம் கோர்ட்டை தல்வார் தம்பதி அணுகியுள்ளது.
இந்த இரட்டைக் கொலை வழக்கில் தல்வார் தம்பதிதான் முக்கியக் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 14 வயதான ஆருஷியும், வேலைக்காரர் ஹேமராஜும் தல்வார் வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களைக் கொலை செய்தது யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. இறுதியில் தல்வார் தம்பதிதான் இந்தக் கொலைகளைச் செய்தது என்று சிபிஐ தெரிவித்து இருவரையும் கைது செய்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications