கருணாநிதி, ஜெயலலிதாவை சாதி ரீதியாக விமர்சித்த பி.டி.அரசகுமார்: விரைவில் கைது?

Subscribe to Oneindia Tamil

BT Arasakumar may be arrested soon
மதுரை: கோவிலில் பூஜை செய்பவர்கள், மேளம் அடிப்பவர்கள் என்று சாதி ரீதியாக பேசிய பி.டி. அரசகுமார் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அக்கட்சியைச் சேர்ந்த 5 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ராமதாஸ் தொடங்கிய அனைத்து சமுதாய பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பி.டி.அரசகுமார் தரப்பினர் தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். ஆனாலும், ஆங்காங்கே அனுமதியை மீறி போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்குச் சென்று ராமதாசின் பி.ஏ. நடராஜனை சந்தித்தார் பி.டி.அரசகுமார். அப்போது மக்கள் டி.வி.க்கு அளித்த பேட்டியில், "வடக்கே வன்னியர்; தெற்கே தேவர். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், கோவிலில் பூஜை செய்பவர்களுக்கும், மேளம் அடிப்பவர்களுக்கும் இங்கே வேலை இல்லாமல் போய்விடும் எனவேதான் நம்மை நம்மை ஒடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொன்னாராம்.

இந்த பேச்சு, கருணாநிதி, ஜெயலிலதாவை மறைமுகமாக சாதியைச் சொல்லித் விமர்சிப்பதாக இருப்பதால், பி.டி.அரசகுமார் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+