நிதாகத் விவகாரம்: சவூதியில் இருந்து வெளியேற இ.சி. கோரியுள்ள 18,000 இந்தியர்கள்
ஹைதராபாத்/டெல்லி: சவூதியில் அந்நாட்டு குடிமகன்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நிதாகத் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதையடுத்து அங்கு வாழும் சுமார் 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவிருக்கின்றனர்.
சவூதி அரேபியாவில் ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 2 மில்லியன் இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் சவூதி குடிமக்கள் வேலையின்றி தவிப்பதைபோக்க அந்நாட்டு அரசு நிதாகத் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி சவூதி குடிமகன்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த சட்டத்தால் சவூதியில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
சவூதியில் சட்டவிரோதமாக, முறையான விசா இன்றி அல்லது விசா காலம் முடிந்தும் அங்கு தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அந்நாட்டு அரசு 3 மாத கால அவகாசம் கொடுத்தது. இந்த காலக்கெடு விரைவில் முடிகிறது. இந்நிலையில் சவூதியில் இருந்து வெளியேற விரும்பி சுமார் 18,000 இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் எமர்ஜென்சி சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
நாடு திரும்ப அதிக அளவில் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதற்கு நிதாகத் சட்டம் காரணமில்லை என்றும், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சவூதி அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை தான் காரணம் என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
நிதாகத் சட்டம் குறித்து இந்தியர்கள் கவலை தெரிவித்ததையடுத்து வயலார் ரவி தலைமையிலான குழு சவூதி சென்று அந்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications