இலஞ்சி மாணவி சண்முகவள்ளி நெல்லை மாவட்டத்தில் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பிளஸ்டூ தேர்வில் நெல்லை மாவட்டத்திலேயே முதலாவதாக இளஞ்சியைச் சேர்ந்த சண்முகவள்ளி வந்துள்ளார். அவர் 1185 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இளஞ்சி பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த சண்முகவள்ளி முதலிடத்தைப் பிடித்த நிலையில் அதே பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீபார்வதி 1181 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே பள்ளியின் கோப்பெருந்தேவி 1180 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்தார்.

ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றதைத் தொடர்ந்து அவர்களை பள்ளி முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், தாளாளர் மோகனகிருஷ்ணன், ஆசிரியைகள் பாராட்டினர்.

தூத்துக்குடியில் நம்பர் ஒன் சாய்லட்சுமி

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் கமலாவதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய்லட்சுமி 1181மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 19ஆயிரத்து 20மாணவ, மாணவியர்களில் 18ஆயிரத்து 157பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் தூத்துக்குடி மாவட்டம் 95.46சதவீதம் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளது.

ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய்லட்சுமி 1181மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்பிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களில் கார்த்திகா 1180மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், பகவதி 1175மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில், 6அரசுப் பள்ளிகள், 8அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 25தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி என மொத்தம் 40பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களை கலெக்டர் ஆஷிஷ்குமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியை, ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+