பால், பழம், ஐஸ்கிரீமோடு... 30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த டென்மார்க் தாத்தா

டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்ததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் , அவரது வீட்டில் இருந்து மீண்டும் நாய் குரைக்கும் சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் 2 நாள் முன்பு போலீசில் புகார் தெரிவித்தனர் . இதுபற்றி விசாரிப்பதற்காக போலீசார் நேற்று முன்தினம் சென்ற போது வீடு பூட்டியிருந்துள்ளது. இதையடுத்து, பிரத்யேக வாரன்ட் பெற்ற போலீசார், பூட்டை உடைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கிருந்த 4 நாய்கள், ஒரு பாம்பை மீட்ட போலீசார் வீட்டில் வேறு எங்காவது விலங்குகளை முதியவர் அடைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகத்தோடு வீடு முழுக்க தீவிர சோதனை நடத்தினர். அப்போது, குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அதில் நாய்களின் உடல்கள் திணிக்கப்பட்டிருந்தன.
25 நாய்க் குட்டிகள் உள்பட 30 நாய்களின் உடல்களை ப்ரீசரில் இருந்து போலீசார் மீட்டனர். நாய்கள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. செல்ல பிராணிகளை பிரிய மனமில்லாததால் ப்ரீசரில் வைத்தாரா, அவரே அடித்து கொன்றாரா, அவர் சைக்கோவா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி முதியவரை தேடி வருகின்றனர். .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications