அமெரிக்கா குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய முதியவர் மீது கொடூர தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் குருத்வாரா ஒன்றுக்கு வெளியே நின்று கொண்டிருந்த 82 வயது சீக்கிய முதியவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

கல்போர்னியா மாகாணத்தில் பிரெஸ்னோ என்ற இடத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குருத்வாராவாவில் பியாரா சிங் என்ற 82 வயது முதியவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பியாரா சிங், குருத்வாராவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருநபர் சீக்கிய முதியவரை கனமான இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினார். இதில் பியாராசிங் மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் முதியவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கில்பெட்ர் கார்சியா என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சீக்கியர்கள் அதிகம் வாழும் இடத்தில் இப்படி ஒரு கொடூரதாக்குதல் நடந்திருப்பதால் அவர்கள் அச்சத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+