ஆளுநருடன் அன்புமணி சந்திப்பு- இந்தியாவிலேயே எங்கள் மீது இப்படி வழக்குகள் என புகார்!!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 வழக்குகளில் அன்புமனி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து விடுதலையானார். ஜாமீன் கொடுக்கப்பட்ட போது விதிக்கபட்ட நிபந்தனையின் அடிப்படையில் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் இன்று காலை அவர் கையெழுத்துப் போட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுகிறது. எங்கள் கட்சி நிர்வாகிகள் குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
பின்னர் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ரோசய்யாவை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அன்புமணி கொடுத்தார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, இந்தியாவிலேயே வேறு எந்த கட்சி மீதும் இப்படி பொய் வழக்குகள் போட்டதில்லை. இப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது கிடையாது. இது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முறையிடப் போகிறேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications