வரலாறு பாடம்- பந்தல் தொழிலாளி மகள் மாநிலத்தில் முதலிடம்
சாத்தான்குளம்: பிளஸ் டூ பொது தேர்வில் சாத்தான்குளத்தை சேர்ந்த பந்தல் தொழிலாளி மகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமுத்துண்ணகுடி கிராமத்தை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி செல்வன். இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களது மகள் ஆனிமஞ்சு. இவர் சாத்தான்குளம் செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ கணக்கியல் பிரிவில் படித்தார்.
இவர் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வில் வரலாறு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பாட வாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண் வருமாறு, தமிழ்-184, ஆங்கிலம்-151, பொருளியியல்-194 விலங்கியல்-196, கணக்கு பதிவியல்-200, வரலாறு-200 என மொத்தம் 1125 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஆனிமஞ்சு கூறுகையில், பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிகாலை 4 மணிக்கு எழுந்து படித்தேன். பெற்றோர், ஆசிரியர் எனக்கு ஊக்கமளித்தனர். இதன் காரணமாக நான் வரலாறு பாடத்தில் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், வரலாறு ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications