மிசோராமில் நிலச்சரிவு: 8 பேர் பலி… 11 பேர் மாயம்
Subscribe to Oneindia Tamil
அய்ஸ்வால்: மிசோராம் மாநில தலைநகர் அய்ஜ்வாலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் அய்ஸ்வால் உள்ளிட்ட மிசோரமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டுவந்தன. சாலைப்போக்குவரத்தும் தடை பட்டிருந்தது.
இந்நிலையில் அய்ஸ்வால் பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூறிய கனமழை கொட்டியது.
விடியவிடிய பெய்த மழையால் இன்று அதிகாலை காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காணாமல்போன 11 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மழை கொட்டுவதால் மீட்டுப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications