என்னது... பதவியில் நீடிக்க ஆட்டை பலி கொடுத்தாரா பவன்குமார் பன்சால்?

பவன்குமார் பன்சாலின் பதவி எப்போது வேண்டுமானாலும் பணால் ஆகும் என்பதால் அவரது டெல்லி வீடு பத்திரிகையாளர்களால் முற்றுகையிடப்பட்டே இருந்தது. நேற்று காலை முதலே பவன்குமார் பன்சால் வீட்டின் முன்பாக பத்திரிகையாளர்கள், டிவி காமிராக்களுடன் குவிந்திருந்தனர். அவர் ராஜினாமா செய்யப் போகிறாரா? இல்லையா? என்பது குறித்து கருத்து கேட்க அவர்கள் காத்திருந்தனர். அப்போதுதான் அந்த காட்சியும் பத்திரிகையாளர்கள் கண்ணில்பட்டது.. பவன்குமார் பன்சால் வீடு அதி உயர் பாதுகாப்பு பகுதி. அங்கு கார் ஒன்றின் அருகே ஆடு ஒன்று கட்டப்பட்டிருந்தது. பவன்குமார் வீட்டில் ஆடு என்ன செய்கிறது ? என்று பத்திரிகையாளர்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் பவன்குமார் பன்சாலும் அவரது குடும்பத்தினரும் ஆடு சாப்பிட சிலவற்றை கொடுத்தனர். சிறிது நேரத்தில் காலை முதல் உலா வந்த அந்த ஆடு திடீரென மாயமானது. இதனால் ஒரு தகவல் பரவியது. தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஆடு பலி கொடுத்து பரிகாரம் செய்திருக்கிறார் பவன்குமார் என்பதுதான் அது.. சில செய்தி சேனல்களில் ஆடு பலி கொடுத்தால் பரிகாரமா என்ற ரேஞ்சுக்கு லைவ் விவாதங்களும் களைகட்டின..
ஆனால் இரவில் பவன்குமார் பன்சால் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது...அப்ப ஆடு பலிகொடுத்தும் ஒன்னும் நடக்கலையோ என்ற கமெண்ட்தான் டெல்லி பத்திரிகையாளர்களிடம் உலாவியது..












Click it and Unblock the Notifications