கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நாளை மீனவர்கள் ஸ்டிரைக்: உதயகுமார் அறிவிப்பு
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நாளை மீனவர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அணு உலைக்கு எதிரான இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்களும், பொது மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தடை விதிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்க தடை இல்லை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என அணு உலைக்கு எதிரான இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்தார்.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய செயல்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி போராட்டக் குழுவினர் அடுத்த கட்டமாக நாளை (மே 14ம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலை நிறுத்ததிற்கு ஆதரவு திரட்டுவதற்காக உதயகுமார் கடல் வழியாக 4 படகுகளில் தனது ஆதரவாளர்களுடன் உவரி வந்தார். அங்கு வேளாங்கண்ணி மாதா ஆலயம் முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
நாளை குமரியில் இருந்து தூத்துக்குடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும். அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதையும் மீறி கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்குவோம் என்று அரசு அறிவித்தால் அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த அறிவிப்பால் இடிந்தகரை அருகே உள்ள தாமஸ் மண்டபம் விலக்கில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இடிந்தகரை மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications