ஈரான் அதிபர் தேர்தல்: 19 முதல் 87 வயது வரையுள்ள 686 பேர் வேட்புமனு
டெஹ்ரான்: வரும் ஜூன் மாதம் 14ம் தேதி நடக்கும் ஈரான் அதிபர் தேர்தலில் போட்யிட 19 வயது வேட்பாளர், 30 பெண்கள் உள்பட 686 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ஈரானில் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் உள்பட மொத்தம் 686 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து வைத்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார் தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 19 வயது, 87 வயது வேட்பாளர்களும் அடக்கம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட 475 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் தேர்தலில் போட்டியிட 4 பேருக்கு மட்டுமே ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கோமேனி கட்டுப்பாட்டில் உள்ள கார்டியன் கவுன்சில் அனுமதி அளித்தது.
கார்டியன் கவுன்சில் தேர்தலில் போட்யிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய அதற்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அது கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் கேட்கலாம்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications