இந்தியப் பிரதமரை பதவியேற்புக்கு அழைப்பேன்- நவாஸ் ஷெரீப்
லாகூர்: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பன் என்று பாகிஸ்தானில் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் என் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஷெரீப் மீண்டும் பிரதமராகத் தேர்வாகவுள்ளார். இன்னும் அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்தான் 3வது முறையாக பிரதமராகவுள்ளார்.
இந்த நிலையில், பதவியேற்பு விழாவுக்கு மன்மோகன் சிங்கை அழைப்பேன் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 1999ம் ஆண்டு தொடங்கிய இரு நாடுகளின் அமைதிப் பயணம் தொடர வேண்டும். எனவே இந்தியா என்னை அழைக்கிறதோ இல்லையோ நான் இந்தியா செல்வேன். இது உறுதி.
எனது பதவியேற்பு விழாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அழைப்பேன். அவர் வர வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.












Click it and Unblock the Notifications