கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு: 3மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணுமின் நிலையம் செயல்பட அனுமதி வழங்கி அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடித் தடைக்காலம் என்பதால், விசைப்படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் செல்லமாட்டார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டுப்படகு மீனவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம், செட்டிகுளம் பகுதிகளில் இன்று கடைஅடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
அணுமின் நிலைய செயல்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் சார்பில் காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தையும் மீறி அணுமின் நிலையத்தை இயக்க அரசு முன்வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications