கலைகல்லூரியில் அலைமோதும் மாணவ, மாணவிகள்: பி காம், பி.ஏ.ஆங்கிலத்திற்கு வரவேற்பு
நெல்லை: மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பம் பெற மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ப்ளஸ்டூ முடித்த மாணவ, மாணவிகள் மேற்படிப்பு பயில இஞ்சினியரிங் கல்லூரிகளில் மட்டுமல்ல அரசு கலை கல்லூரிகளிலும் விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றனர். இதனால் மதுரை, நெல்லை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் நீண்ட வரிசையில் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கல்லூரி வளாகம் திருவிழா போல காட்சியளிக்கிறது.
கடந்த 9ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. அன்று முதல் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
அதிகாலையே கல்லூரியில் திரளும் மாணவ, மாணவிகள் இளங்கலை பயில விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக பிகாம், பிஎஸ்சி, பிஏ ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடபிரிவுகளுக்கு அதிக அளவில் போட்டி உள்ளது.
சில கல்லூரிகளில் குறிப்பிட்ட பாட பிரிவுகளுக்கு 60 இடங்களே உள்ள நிலையில் 1000க்கும் அதிகமானோர் மனுக்களை பெற்றுள்ளனர். மாலை நேர கல்லூரிகளிலும் முக்கிய பாடப்பிரிவுகளுககு போட்டி உள்ளது. இதனால் பல கல்லூரிகளில் மதிப்பெண் மற்றும் பிற தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு சீட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள் மட்டுமின்றி அரசு கலைக்கல்லூரிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. அரசு கல்லூரிகளில் மாணவிகளின் மனுக்கள் குவிந்துள்ளதால் தகுதி அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மாணவிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் பிடிக்க மனு பெற்றவர்களுக்கு கலை கல்லூரிகளிலும் மனு பெற்றுள்ளனர். ஒரு வேளை இன்ஜினியரிங்கில் தங்கள் விருமபும் பாடம் மற்றும் கல்லூரிகள் கிடைக்காவிட்டால் கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் ஏதாவது ஓன்றில் இளங்கலை பட்டப்படிப்பு பயில முடிவு செய்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications