சென்னைக்கு 600 கி.மீ கிழக்கே மகாசேன் புயல்.. மழை பெய்யலாம்
சென்னை: சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் மகாசேன் புயல் நில கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மகாசேன் புயல் மத்திய மேற்கு வங்க கடலில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வங்க தேசம், மியான்மர் அருகே 17-ந் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக போச்சம்பள்ளி, கரூர், ராசிபுரம், பாப்பிரெட்டி பட்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும், விருத்தாசலம், திருப்பத்தூர், சேந்தமங்கலம், குளித்ததுரை, பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் நகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மகாசேன் புயல் கரையை கடந்த பிறகு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications