சிறையில் 'கரண்டி' பிடிப்பாரா அல்லது கார்பென்டர் ஆவாரா சஞ்சய் தத்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மே 16ம்தேதி சரணடைந்து சிறைக்குச் செல்லவுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் சமையல்காரர் வேலை கிடைக்கும் என்று தெரிகிறது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே ஒன்றரை வருடத்தை சிறையில் கழித்து விட்ட சஞ்சய் தத் தனது தண்டனைக் காலத்தில் மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளைக் கழிக்கவுள்ளார். உச்சநீதிமன்றம் விதித்த கெடுவின்படி அவர் மே 16ம் தேதி சரணடையவுள்ளார்.

சிறையில் அவருக்கு தண்டனைக் கைதிகளுக்கான உடையும், எண்ணும் தரப்படும். அவருக்கு வேலையும் தரப்படும். அவருக்குப் பிடித்த வேலையை அவர் தேர்வு செய்யலாம்.

என்ன வேலை கிடைக்கும்

என்ன வேலை கிடைக்கும்

தச்சர், கார்பெட் தயாரிப்பு, தோல் தொழிற்சாலை, சமையல் வேலை உள்பட பல வேலைகள் சிறையில் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை சஞ்சய் தத் தேர்வு செய்ய வேண்டும்.

போனவாட்டி தச்சு வேலை

போனவாட்டி தச்சு வேலை

கடந்த முறை சிறைவாசம் அனுபவித்தபோது தச்சு வேலையை தேர்வு செய்தார் சஞ்சய் தத். ஒரு சேரையும் அவர் தானே தயாரித்திருந்தார்.

தினசரி ரூ. 25 சம்பளம்

தினசரி ரூ. 25 சம்பளம்

எந்த வேலையாக இருந்தாலும் தினசரி ரூ. 25 கூலியாக தரப்படும். திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்த சஞ்சய் தத்துக்கு இந்தத் தொகை மிக மிக மிக மிக சிறியதே.

போகப் போக சம்பளம் கூடும்

போகப் போக சம்பளம் கூடும்

ஆரம்பத்தில் தினசரி 25 ரூபாயாக வழங்கப்படும் சம்பளம், அந்தத் தொழிலில் நிபுணத்துவம் பெற்றதும் தினசரி ரூ. 50 ஆக உயர்த்தப்படும்.

குடும்பத்தார் ரூ.1500 கொடுக்கலாம்

குடும்பத்தார் ரூ.1500 கொடுக்கலாம்

ஒரு கைதிக்கு அவரது குடும்பத்தினர் மாதந்தோறும் ரூ. 1500உதவித் தொகையாக கொடுக்கலாம்.

மாதம் 5 பேர் 20 நிமிடம் சந்திக்கலாம்

மாதம் 5 பேர் 20 நிமிடம் சந்திக்கலாம்

அதேபோல ஒரு கைதியை அவரது குடும்பத்தினர் ஐந்து பேர் வரை மாதம் ஒரு முறை சந்தித்துப் பேசலாம். அதுவும்கூட 20 நிமிடம் வரை சந்திக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+