சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு: 17 பேர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு மீனாட்சி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுற்று பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பென்சில் வெடிக்கு முனை மருந்து தடவி கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பட்டாசில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.
அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த மேலும் 2 அறைகளுக்கும் பரவியது. அங்கு குவிக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்தன.
பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் 3 அறைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிகிறது. தீ விபத்து ஏற்பட்டதும், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர். சிலர் தீயில் சிக்கி தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 அறைகளும் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்தில் 20 பேரின் உடல் கருகியது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார் இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications