உச்சமான உட்கட்சி மோதல்.. தஞ்சாவூரில் டி.ஆர்.பாலுவை தாக்க முயன்ற திமுகவினர்! கார் உடைப்பு!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் பழனிமாணிக்கத்துக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்.. இந்த நலையில் தஞ்சாவூர் பாச்சூர் துரைராசு மகன் பாரதிராஜா திருமணம் இன்று நடைபெற்றது. இந்த துரைராசு பழனி மாணிக்கத்தின் முன்னாள் ஆதரவாளர். தற்போது டி.ஆர்.பாலு முகாமில் துரைராசு இருப்பதால் பாலு ஆதரவாளர்களான எல். கணேசன், ஒரத்தநாடு காந்தி என ஏராளாமானோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதனால் டி.ஆர். பாலுவுக்கு புகழாரம் சூட்டுகிற நிகழ்ச்சியாக கல்யாண மேடை அமைந்தது.
டி.ஆர். பாலுவும் பழனி மாணிக்கத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் தமிழகத்துக்கு தான் வாங்கிக் கொடுத்த திட்டங்களைப் பட்டியல் போட்டு அடுக்கினார். ஒருவழியாக கல்யாணம் முடிந்தது. திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலுவை, பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் சூழ்ந்து கொண்டனர். இந்த கல்யாணத்துக்கு வரக்கூடாது என்று சொன்னேமே...என்று கேள்வி கேட்க டி.ஆர். பாலுவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இருதரப்புக்கும் இடையே கைகலப்பாகிவிட்டது. அதே நேரத்தில் டி.ஆர்.பாலுவின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடுப்பாகிப் போன டி.ஆர்.பாலு தமது கல்லூரிக்கு விரைந்துவிட்டார்.
திமுக சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டையில் எல்.கணேசனின் நூல் வெளியீட்டு விழா, பேராவூரணியில் பொதுக்கூட்டம் என 2 நாட்கள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இன்று கைகலப்பு களைகட்டியதால் திமுகவினரிடையே கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா










Click it and Unblock the Notifications