மகாராஷ்டிரா 10ம் வகுப்பு புத்தகத்தில் இந்தியா மேப்பில் அருணாச்ச பிரதேசத்தை காணவில்லை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநில பத்தாம் வகுப்பு புவியியல் புத்தகத்தில் உள்ள இந்திய வரைபடத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தை காணவில்லை.

மகாராஷ்டிரா மாநில பத்தாம் வகுப்பு பவுயியல் புத்தகத்தைப் பார்த்த மாணவர்களும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதில் உள்ள இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையே காணவில்லை. இதையடுத்து இது குறித்து மாநில அரசு மகாராஷ்டிரா மாநில மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியத் தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இது குறித்து வாரியத் தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளேன் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜேந்திர தர்தா தெரிவித்துள்ளார்.

புத்தகத்தில் அருணாச்சல பிரதேசம் சீன நாட்டின் ஒரு பகுதியாக காண்பிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தவறான வரைபடம் உள்ள புத்தகம் மகாராஷ்டிரா ஸ்டேட் போர்ட் வகையில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகத்தை தான் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

வாரியத் தலைவர் ஜாதவ் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+