மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் 3ம் வகுப்பு மாணவனின் தலையைப் பிடித்து ஆசிரியை சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதில் அந்த மாணவன் பலியானான்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது நிர்தேஷ்காளி சிஷு சிக்ஷா கேந்திரா பள்ளி. அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாபி ஜோவார்தர்(9). பாபி வீட்டுப் பாடத்தை முடிக்காமல் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சம்பா மோன்டல் சிறுவனின் தலையைப் பிடித்து சுவற்றில் வேகமாக மோதியுள்ளார்.
இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள நேஷனல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தான்.
இதைடுத்து ஆசிரியை சம்பாவை போலீசார் இன்று கைது செய்தனர். சம்பா அந்த பள்ளியில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications