ஸ்பெக்ட்ரம் ஊழல்: கலைஞர் டிவி வழக்கில் சாட்சிக்கு நீதிபதி எச்சரிக்கை
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி மீதான புகார் தொடர்பான விசாரணையின் போது உரிய பதிலளிக்காத சாட்சி ஒருவருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழக்கில் சினியுக் நிறுவனம் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது சி.பி.ஐ. புகார். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கரீம் மொரானியின் சகோதரர் முகமது மொரானி ஆஜராகி சாட்சியம் அளித்தார். ஆனால் அவர் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்காமல் தவிர்த்து கொண்டே வந்தார். இதனால் கடுப்பான நீதிபதி ஓ.பி.சைனி சாட்சி முகமது மொரானியைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்த சாட்சி தமது பதில்கள் மூலம் உண்மையைத் திரிக்க முயல்கிறார். அவர் இப்படி செய்யக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தி வந்தேன். ஆனால் அவரது போக்கில் மாற்றமில்லை. தொடர்ந்தும் அவர் இப்படி செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனால் முகமது மொரானி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications