நான் அப்பாவி... நண்பன் ஆசைக்காட்டியதால் சூதாட்டத்தில் ஈடுபட்டேன்.. ஸ்ரீசாந்த் கண்ணீர்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா சூதாட்டத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் உள்ளிட்ட 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இன்றும் பல இடங்களில் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தது.
நான் அப்பாவி-ஸ்ரீசாந்த்
இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
இதனிடையே ஸ்ரீசாந்திடம் நேற்று டெல்லி போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும், தனது நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டி தம்மை இதில் இழுத்துவிட்டுவிட்டதாக கண்ணீர்விட்டு அழுது புலம்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications