பிரபாகரன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல் உண்மையல்ல! - திவயின

பிரபாகரனின் கைவிரல் அடையாள சாட்சியங்களின் மூலம் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கைவிரல் அடையாள மாதிரிகளும், நந்திக்கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தின் கைவிரல் அடையாள மாதிரிகளும் ஒத்துப் போவதாக முக்கிய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி புலிகளின் மூன்று படகுகளை கடற்படையினர் தாக்கி அழித்ததாகவும், எவரும் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கப்படவில்லை. மேலும் இலங்கை அரசு பிரபாகரன் இறப்புச் சான்றிதழையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்களுக்கு இறப்புச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications