புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு: 100 விவசாயிகள் கைது… கோவையில் பதற்றம்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவை நீலாம்பூர் பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை 60 கிலோ மீட்டர் தொலைவில் புறவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைக்கவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 1000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

புறவழிச்சாலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 1500 வீடுகளும், 150 குறுந்தொழிற்சாலைகளும் அழியும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட்டு, மாற்றுப்பாதைகளில் புறவழிச்சாலை அமைக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.

விவசாயிகள் மறியல் காரணமாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பதற்றம் உருவானது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+