அரசு விழா.. ஜெயலலிதா மே 24ல் ஸ்ரீரங்கம் பயணம்

கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு முதல்வராக பதவியேற்றார்.
இதனையடுத்து, ஸ்ரீரங்கம் முதல்வர் தொகுதி என்பதால், அத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.
இந்த நிலையில், வரும் 24 ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா திருச்சி செல்கிறார். அங்கு நடைபெறும், அரசு விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், காகித ஆலை, 100 கோடி ரூபாய் மதிப்பில், சட்டப்பள்ளி, 120 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தகவல் தொழில் நுட்ப நிறுவனம், ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆகியவை, ஸ்ரீரங்கத்தில், 24 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications