சீமானின் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் யாசின் மாலிக்..கடலூரில் பரபரப்பு!
கடலூர்: கடலூரில். நடைபெற்ற இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்க கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணியை கடலூரில் நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கடலூரில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மாநாடாக இது நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியதால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக போலீசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த உள்ளரங்கக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், இந்தியாவில் இருந்து காஷ்மீர் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறவர். அண்மையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட போது பாகிஸ்தானில் இருந்த யாசின் மாலிக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதில் மும்பை தாக்குதலில் தேடப்படும் தீவிரவாதி ஹபீஸ் சையத்தும் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications