ஜப்பான் புகுசிமா அருகே நிலநடுக்கம்: 5.9 ரிக்டெர் ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil

ஜாப்பானில் புகுசிமா கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து 200 மைல் தொலைவில் நேர்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு கட்டிடங்கள் குலுங்கின.
அதேபோல் பசுபிக் கடற்பகுதியில் 50 மைல் ஆழத்தில் நேர்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் 9 ரிக்டெர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் உருவானது. இதனால் 16,000 பேர் உயிரிழந்தனர். பலகோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்தன. புகுசிமா அணு உலையும் பாதிப்பிற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications