கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கி சூடு: நடிகர்கள் காயமின்றி தப்பினர்

12 நாட்கள் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாம் நாளான இன்று பிரான்ஸ் நாட்டின் கேனல் பிளஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆஸ்கார் விருது வென்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நடிகரான டேனியல் ஆடியுயில் ஆகியோரிடம் பேட்டி எடுத்து கொண்டிருந்தது.
நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியான இதனை பார்வையாளர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒருவன் திடீரென எழுந்து வானை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டான். இதில் அனைவரும் சிதறி ஓடினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக தாவி சென்று அவனை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவனை சோதனையிட்டபோது கையில் எறி வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கூட்டத்தினரை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாவலர்கள் கூறினர். பின்னர் போலீசார் அவனை கைது செய்து அவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு போலியானது என்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் நடிகர்கள் கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் டேனியல் ஆடியுயில் ஆகியோர் காயமின்றி தப்பினர்.












Click it and Unblock the Notifications