ஈராக்கில் இரட்டை குண்டு வெடிப்பு: 76 பேர் பலி 148 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலியாகினர்,148 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

2011 இல் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து முஸ்லிம் குழுக்களுக்கு இடையேயான பதட்டம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஷியா, சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பகையின் சமீபத்திய உச்சகட்ட மோதலாக நேற்று இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகுபா நகரின் மசூதி ஒன்றில், தொழுகை முடித்தவர்கள் வெளியே வந்த சமயத்தில் முதலாவது குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதியில் ஏராளமானோர் கூடிய சிறிது நேரத்திற்குள் இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாகவும். 148 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+