பாக். இரட்டை குண்டு வெடிப்பு 13 பேர் பலி… 150 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வட மேற்கு பாகிஸ்தானின் புறநகர் பகுதியான மலாகாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகவும் இது உள்ளது.

இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை முடித்து வெளியே வரும் போது அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்தில் உடல் சிதறி 13 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழுகை நடத்திவிட்டு வருபவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+