காலில் ‘சாக்ஸ்’, வீட்டில் ‘மோட்டார்’ கூடாது: பாகிஸ்தானின் புது உத்தரவால் மக்கள் பீதி
இஸ்லாமாபாத்: மின்வெட்டோடு, கோடையையும் சேர்த்து சமாளிக்க மக்களுக்கு அடிக்கடி பல்வேறு உத்தரவுகளை வாரி வழங்கி வருகிறது பாகிஸ்தான் அரசு. அதில் தற்போது புதிதாக, காலில் சாக்ஸ் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தானிலும் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அங்குள்ள மக்களும் நம்மைப்போலவே கடுமையான மின்வெட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தானின் சில இடங்களில் 20 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளதாம்.
கோடை வெயிலோடு மின்வெட்டும் கை கோர்த்துக் கொள்ள, பாகிஸ்தான் மக்கள் கொதித்துப் போய் உள்ளார்களாம்.

ஏசி ஆப்பானது...
முதலில், மின்வெட்டை சமாளிக்க அரசு அலுவலகங்களில் ஏ.சி.யை அணைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது அரசு. அது தற்போது அமலிலும் உள்ளது.

சூப்பர் ஆடை...
அடுத்ததாக கோடைக்கு தகுந்தவாறு எவ்வாறு உடையணிய வேண்டும் என்ற புதிய உத்தரவை வெளியிட்டது. அதில் வெள்ளை உடை இருந்தது குறிப்பிடத்தக்கது.

நோ சாக்ஸ்...
தற்போது, வியர்வை மழையில் கால் நனைவதை தவிர்க்கும் வகையில் பாகிஸ்தான் அரசு, புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. அதாகப்பட்டது, இனி செருப்போ அல்லது ஷூவோ அணியும்போது, ‘சாக்ஸ்' அணியக்கூடாது என்பதுதான் அந்த கட்டுப்பாடு.

வாளில இறைங்கப்பா...
அடுத்தப்படியாக மோட்டாரை இயக்கி, ஆழ்துளை கிணற்று நீரை மேலே ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது வேறயா...
இது ஒருபுறம் இருக்க, தண்ணீர் மற்றும் மின்சாரத்துறைகளுக்கு பொறுப்பு ஏற்றுள்ள 2 மந்திரிகள், மின்தட்டுப்பாட்டை சரிசெய்ய, மின்சாரம் மற்றும் கியாஸ் விலையை உயர்த்துவதே ஒரே வழி எனக் கூறி. இதனால், பாகிஸ்தான் மக்கள் மேலும் பீதி அடைய வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications