இந்தியாவும், சீனாவும் இனி, கூட்டாளிகள் என்கிறார் சீனப் பிரதமர் லீ
டெல்லி: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது, எல்லைப் பிரச்சினை தீர்ந்தது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் எல்லைப்பிரச்சினைக்கான தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. மேலும் இப்பேச்சு வார்த்தையில், 8 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
பின்னர், நேற்று டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில், இந்திய தொழில் வர்த்தக சபை (பிக்கி) ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களிடையே லீ கெகியாங் பேசினார்.

நிகழ்ச்சியில் லீ கெகியாங் கூறியதாவது,
நாங்க கூட்டாளிகள்...
இந்தியா மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் என்பதை விட கூட்டாளிகள் என்றுதான் சொல்வேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, மிகப்பெரிய சந்தையுடன் ஒவ்வொரு தரப்பும் முன்னேற்றம் அடைவது என்பது அவர்களது மக்களுக்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் புதிய என்ஜின்களாக இணைந்து செயல்படும்.
இந்திய-சீன உறவு...
21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய உறவாக இந்திய-சீன உறவு அமைந்துள்ளது. உலக அமைதிக்கும், வளத்துக்கும் இவ்விருநாடுகளும் இணைந்து புதிய அத்தியாயத்தை எழுத முடியும். இந்தியாவும், சீனாவும் ஒரே குரலில் பேசுகிறபோது, அதை உலகமே காது கொடுத்து கேட்கும். பிரதமர் மன்மோகன்சிங்குடனும், பிற இந்திய தலைவர்களுடனும் நான் நடத்திய பேச்சு வார்த்தை களங்கமற்றதாக, நிறைவானதாக அமைந்தது. இந்தப் பேச்சு வார்த்தைகள், சந்திப்புகள் எனக்கு திருப்தி அளித்தது.
எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு...
எல்லா விஷயத்தையும் விவாதப்பொருளாக்கி பேசினோம். எல்லைப்பிரச்சினை குறித்தும் விலகி ஓடி விட வில்லை. எல்லைப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு முன்னெடுத்துச்செல்ல இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டுள்ளோம் என லீ கெகியாங் கூறினார்.
பழமொழி கூறி அசத்திய லீ....
அண்டை நாடான இந்தியாவுடன் சீனா கொண்டுள்ள நட்புறவின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதத்தில், 'பக்கத்தில் உள்ள அண்டை வீட்டுக்காரரைவிட தொலைவில் உள்ள உறவினர் பயன்தரமாட்டார் என்ற அர்த்தம் பொதித்த சீனப்பழமொழியை லீ கூறினார்.
சொந்த நாடு போல் உணர்ந்தேன்...
பிரதமர் லீ கெகியாங்கின் இந்தியப்பயணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன அரசு பத்திரிகை ஒன்று, ‘‘பிரதமர் மன்மோகன்சிங்குடனான பேச்சுவார்த்தை ஆழமானது, நட்புரீதியிலானது, வெளிப்படையானது. இது நான் சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. மன்மோகன்சிங்கின் ஏற்பாடுகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்'' என்று பிரதமர் லீ கூறியதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் போகிறார் லீ...
நேற்று, இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்ட சீனப்பிரதமர் லீ கெகியாங் இன்று பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications